search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேதார்நாத் கோவில்"

    பிரதமர் மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேதார்நாத், பதிரிநாத் சென்றுள்ள நிலையில், கேதார்நாத் யாத்திரை குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    பிரதமர் நரேந்திரமோடி நேற்று உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் அருகே உள்ள புனித குகைக்கு சென்று அவர் தியானம் மேற்கொண்டார். விடிய விடிய தியானத்தில் ஈடுபட்டு இருந்த மோடி இன்று காலை குகையை விட்டு வெளியே வந்தார். பிரதமரின் வருகையையொட்டி கேதர்நாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோதும் கேதார்நாத் பயணத்துக்கு அனுமதி அளித்த தேர்தல் கமி‌ஷனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு மோடி கூறினார்.

    பின்னர் அவர் அங்கிருந்து பத்ரிநாத் சென்று அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட்டார். இன்று பிற்பகல் மோடி டெல்லி திரும்புகிறார்.

    அவர் கேதார்நாத் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த காட்சி டிவி-க்களில் ஒளிபரப்பானது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    அதில் பிரதமர் நரேந்திர மோடியின் கேதார்நாத் யாத்திரை டெலிவி‌ஷன்களில் ஒளிபரப்பப்பட்டது. அதன் மூலம் மோடி தேர்தல் விதிமுறையை மீறியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.



    இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிக் ஓ’பிரைன் கூறுகையில் ‘‘கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 17-ந்தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்த போதிலும், இரண்டு நாட்களாக மோடியின் கேதார்நாத் யாத்திரை தேசிய மற்றும் உள்ளூர் டிவி-க்களில் ஒளிபரப்பானது ஆச்சர்யத்தை அளிக்கிறது. இது தேர்தல் விதிமுறையை மீறியதாகும்.

    அவரது செயல்பாடுகள் நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது ஒருவகையில் வாக்காளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈர்க்கக்கூடிய செயலாகும். மோடி பின்பக்கத்தில் இருந்து மோடி, மோடி என்ற கோஷம் எழுப்பப்பட்டது’’ என்றார்.
    இந்தியர்கள் வெளிநாடு செல்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அதேவேளையில் இந்தியாவில் உள்ள விதவிதமான இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என மோடி தெரிவித்துள்ளார்.
    பிரதமர் மோடி நேற்று கேதார்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் புனித குகையில் தியானத்தை மேற்கொண்டார். இன்று காலை தியானத்தை முடித்து, மீண்டும் சாமி தரிசனம் செய்தார். மோடி வருகையையொட்டி அங்கு ஏராளமான பக்கதர்கள் குவிந்தனர். அவர்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார்.



    பின்னர் மோடி கூறுகையில் ‘‘நம்முடைய நாட்டு மக்கள் நமது நாட்டை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வது குறித்து எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அவர்கள் நம்முடைய நாட்டில் உள்ள விதவிதமான இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும்’’ என்றார்.
    கேதார்நாத் புனித குகையில் தியானத்தை முடித்த பிரதமர் மோடி, எனக்கும் கேதார்நாத்துக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது என்று கூறினார்.
    பிரதமர் மோடி நேற்று கேதார்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் புனித குகையில் தியானத்தை மேற்கொண்டார். இன்று காலை வரை தியானம் இருப்பார் என்று கூறப்பட்டது.

    அதன்படி இன்று காலை வரை தியானம் இருந்த பிரதமர், தியானத்தை முடித்த பின்னர் மீண்டும் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘கேதார்நாத்தில் வழிபட்டதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். கேதார்நாத்துக்கும் எனக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது.



    கேதார்நாத் வளர்ச்சிக்காக நான் பணியாற்றி வருகிறேன். காணொலி காட்சி மூலம் எனக்கான தகவல்களை நான் சேகரித்து வருகிறேன். கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். எடுப்பதற்காக அல்ல. நாட்டில் நடப்பதில் இருந்து விலகி ஆன்மீக பயணமாக கேதார்நாத் வந்துள்ளேன்’’ என்றார்.
    சூறாவளி தேர்தல் பிரசாரத்தை முடித்துள்ள பிரதமர் மோடி இன்று கேதார்நாத் சென்று சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.
    டேராடூன்:

    இமயமலைத் தொடரில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

    அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு கடந்த 9-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.  ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



    பிரமதர் மோடி பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நேற்றுடன் ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரமும் நிறைவடைந்துள்ளது. பிரசாரம் முடிந்துவிட்டதால் நான் சற்று ஓய்வெடுக்கலாம் என்று பிரதமர் கூறியிருந்தார்.

    இந்நிலையில் அவர் இன்று கேதார்நாத் சென்று சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோவில் நடை 6 மாதத்திற்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். #KedarnathTemple #CharDhamYatra
    டேராடூன்:

    இமயமலைத் தொடரில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

    அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு இன்று கோவில் நடை திறக்கப்பட்டது. இதற்காக கோவில் வண்ணம் தீட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவு வாயில், வேத மந்திரங்கள் முழங்க அதிகாலை 5.30 மணியளவில் திறக்கப்பட்டது. அப்போது கோவில் பூசாரிகள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கேதார்நாத் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேதார்நாத் வரும் பக்தர்களின் வசதிக்காக மாநில அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இரவு நேரங்களில் சுமார் 3000 பக்தர்கள் தங்கும் வகையில், கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன.

    கோடை காலம் தொடங்கியபோதிலும், கேதார்நாத் கோவில் வளாகத்தில் இன்னும் பனிசூழ்ந்து காணப்படுகிறது. பக்தர்கள் கோவிலுக்கு எளிதில் சென்று வரும் வகையில், பனிக்கட்டிகளை அகற்றி பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    இமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில், பத்ரிநாத் விஷ்ணு கோவில் மற்றும் கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய அம்மன் கோவில்களுக்கான, சார்தாம் யாத்திரை நேற்று முன்தினம் அட்சய திருதியை தினத்தில் தொடங்கியது. முதல் நாளில் கங்கோத்ரி கோவில் நடை காலை 11.30 மணிக்கு திறக்கப்பட்டது. மதியம் 1.15 மணிக்கு யமுனோத்ரி கோவில் நடை திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று கேதார்நாத் கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு தொடங்கியிருக்கிறது. பத்ரிநாத் விஷ்ணு கோவில் நடை நாளை (9-ம் தேதி) திறக்கப்படுகிறது.



    ஒவ்வொரு ஆண்டும் இந்த சார்தாம் யாத்திரை காலங்களில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த 4 புனித தலங்களுக்கும் வந்து வழிபடுகின்றனர். யாத்ரீகர்கள் முதலில் யமுனோத்ரியில் வழிபாடு நடத்தி விட்டு அதன்பின்னர் கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களில் தரிசனம் செய்துவிட்டு, இறுதியாக பத்ரிநாத் வந்து விஷ்ணுவை வழிபட்டு யாத்திரையை நிறைவு செய்வார்கள். #KedarnathTemple #CharDhamYatra




    ×